2017 ஆம் ஆண்டு (MMXVII) ஆனது கிரிகோரியன் நாட்காட்டியின் படி ஞாயிற்றுக் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாக இருக்கும். இது கி.பி. 2017ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 17ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 17ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் 2010களின் எட்டாம் ஆண்டாகவும் இருக்கும்.[1][2][3]
எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள்
நாள் தெரியாதவை
- உரோயிங்குக்கும் அனினிக்கும் அருகிலுள்ள டிபங் பள்ளத்தாக்கு அணையானது இந்தியாவில் கட்டி முடிக்கப்படும்.
- ஜான் எஃப். கென்னடியின் படுகொலை தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்படும்.
- சீன விண்வெளித்துறை சார்பில் நிலவுக்கு விண்கலம் அனுப்பப்படும். மேலும் சில ஆண்டுகள் கழித்து ஆளுடைய பயணம் நிலவுக்கு மேற்கொள்ளப்படும்.
- தென் கொரியா தனது விண்வெளித் திட்டத்தைத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஐரோப்பாவின் மிகப்பெரிய தொலைநோக்கித் திட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சனிக் கோளுக்கு அனுப்பப்பட்ட காசினி விண்கலம் ஆனது தனது 13 ஆண்டு திட்டத்தை முடித்துக் கொண்டு சனிக் கோளுக்குள் வீழ்த்தப்பட்டு விடும்.
நாட்காட்டி
மேற்கோள்கள்