Share to: share facebook share twitter share wa share telegram print page

க. பாஸ்கரன்

க. பாஸ்கரன்
11-ஆம் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
பதவியில்
6 ஆகத்து 2015 - 5 ஆகத்து 2018
முன்னையவர்ம. இராசேந்திரன்
பின்னவர்கோ. பாலசுப்பிரமணியன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சனவரி 1951 (1951-01-05) (அகவை 74)
மாயூரம்,
மதராசு மாநிலம், (தற்போது மயிலாடுதுறை, தமிழ்நாடு), இந்தியா
பெற்றோர்க.விருதாம்பாள் (தாய்) ஆர்.கணபதி (தந்தை)
முன்னாள் மாணவர்

க.பாஸ்கரன் (பிறப்பு 5 சனவரி 1951) தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் பிறந்தவர். இவரது பெற்றோர் ஆர்.கணபதி, க.விருதாம்பாள். சைவ சித்தாந்தத்திலும், பண்பாட்டு ஆய்வுகளிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். பல ஆய்வியல் நிறைஞர்களையும், முனைவர் பட்ட ஆய்வாளர்களையும் உருவாக்கியுள்ளார். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 6 ஆகஸ்டு 2015 முதல் 5 ஆகஸ்டு 2018 வரை துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.[1]

படிப்பு

  • இளங்கலை (பூம்புகார் கல்லூரி, சென்னைப்பல்கலைக்கழகம், 1969-72)
  • முதுகலை (பூம்புகார் கல்லூரி, சென்னைப்பல்கலைக்கழகம், 1972-74)
  • ஆய்வியல் நிறைஞர் (பூம்புகார் கல்லூரி, சென்னைப்பல்கலைக்கழகம், 1978-79)
  • முனைவர் (சென்னைப் பல்கலைக்கழகம், 1979-82)

பெற்ற விருதுகள்

  • ஜவகர்லால் நேரு நினைவு விருது, புதுதில்லி
  • சிறந்த கல்வி மற்றும் ஆய்வாளர் விருது, மும்பை
  • நற்றமிழ் நாவலர் விருது (திருவாவடுதுறை ஆதீனம்)
  • ராஷ்ட்ரிய கௌரவ் விருது, புதுதில்லி
  • சமய நல்லிணக்க விருது (சத்தியசோலை, கும்பகோணம்)
  • குறள்நெறிச் செம்மல் (திருக்குறள் பேரவை, தஞ்சாவூர்)
  • சைவ சித்தாந்த வித்தகர், தஞ்சாவூர்
  • சித்தாந்த செம்மல் (பல்வேறு சமய நிறுவனங்கள், தஞ்சாவூர், 1998)
  • 2000 ஆண்டிற்கான சிறந்த மனிதர் விருது (அமெரிக்கா, 2000)
  • சைவ சித்தாந்த வித்தகர் (சூரியனார் கோயில் ஆதீனம், அறுபத்துமூவர் மன்றம், தஞ்சாவூர், 2001)

கல்வியனுபவம்

  • பேராசிரியர், மெய்யியல் மற்றும் பண்பாட்டுத்துறை, பூம்புகார் கல்லூரி, மேலையூர் (1974-89)
  • பேராசிரியர் மற்றும் இயக்குநர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (1989-2011)

வெளியிட்டுள்ள நூல்கள்

கீழ்க்கண்டவை உள்ளிட்ட சுமார் 20 நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் 12ஆங்கில நூல்களும் அடங்கும்.

  • சமுதாயத்தத்துவம் [2]
  • ஆகமங்கள் சைவம், வைணவம்
  • சைவ சித்தாந்தத்தில் அறிவாராய்ச்சியியல் [3]
  • தியாகராஜர் கீர்த்தனைகளில் தத்துவச் சிந்தனைகள் [4]
  • பண்பாடு
  • யோகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்
  • இறையியல், சமூகவியல், பண்பாடு
  • சைவத்தின் இறைக்கோட்பாடு

தொலைக்காட்சி, வானொலி

பிபிசி, சன், ஏஎன்எம், உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளிலும், சமணம், சித்தர்கள், புத்தர், நாயன்மாகள், மேற்கத்திய தத்துவம் உள்ளிட்ட பல தலைப்புகளில் வானொலியிலும் உரையாற்றியுள்ளார்.

வெளிநாட்டுப் பயணங்கள்

தென் ஆப்பிரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, மலேசியா,இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Kembali kehalaman sebelumnya